நட்சத்திர கிரிக்கெட் போட்டி: ரஜினி, கமல் பங்கேற்பு

Bookmark and Share

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: ரஜினி, கமல் பங்கேற்பு

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி இன்று சரியாக காலை 10 மணிக்கு இந்த  போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக ரஜினி, கமல் ஆகியோர் வந்திருந்தனர்.

மேலும், தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜேந்திர பிரசாத், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட அனைவரும் போட்டியில் யார், யாருடன் மோதுவது என்பதை தேர்வு செய்தனர்.

இந்த போட்டியில் முதலாவதாக சென்னை சிங்கம் அணியும், திருச்சி டைகர்ஸ் மோதுகின்றன. சென்னை சிங்கம் அணிக்கு சூர்யா கேப்டனாகவும், திருச்சி டைகர்ஸ் அணிக்கு சிவகார்த்திகேயன் கேப்டனாகவும் உள்ளனர்.

இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சிங்கம் அணியின் கேப்டன் சூர்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து திருச்சி டைகர்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடர்ந்து மற்ற அணிகளும் மோதுகின்றன.


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions