செவாலியர் விருதுக்கு தேர்வான கமலுக்கு ரஜினி வாழ்த்து!

Bookmark and Share

செவாலியர் விருதுக்கு தேர்வான கமலுக்கு ரஜினி வாழ்த்து!

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் கமலின் சிறந்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த உயரிய விருதை பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக செவாலியர் விருது பெறும் ஒரே நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. செவாலியர் விருதுக்கு தேர்வான கமல்ஹாசனுக்கு திரைத்துறையை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சக நடிகரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரஜினிகாந்த், செவாலியே விருதுக்கு தேர்வான கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions