ரஜினிக்கு போட்டியாக கமலும் அரசியல் அறிவிப்பு வெளியிடுகிறரா ?

Bookmark and Share

ரஜினிக்கு போட்டியாக கமலும் அரசியல் அறிவிப்பு வெளியிடுகிறரா ?

நடிகர்கள் அரசியலுக்கு வருவது காலகாலமாக நடந்து வருகிறது. நடிகர்கள் இருந்த எம் ஜி ஆர் முதல் ஜெயலலிதா வரை தமிழகத்தை நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்தவர்கள். நீண்ட வருடங்களை ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு அடிபட்டவந்தது.

கடந்த ஜூலை மாதம் ரஜினி வாய் திறந்த போர் வரும்போது பார்த்துக்கலாம் என்று சூசகமாக தனது அரசியல் பயணத்தை பற்றி துவக்கி வைத்தார். அதே சமயம் கமலும் நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்ட்ட நிலையில் கமலஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று அவரது நற்பணி இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் கோவை ஆர். தங்கவேலு மீண்டும் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கமலஹசன் நற்பணி இயக்கம் சார்பில் முப்பெரும் விழா சேலத்தில் நடந்தது. இதில் கோவை தங்கவேலு கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சேலம் மாவட்ட பொறுப்பாளர் பாலசந்தர் மற்றும் நற்பணி இயக்கத்தினர் திரளாக பங்கேற்றனர். ஜனவரி மாதத்தில் அரசியல் பிரவேசம் குறித்து கமல் அறிவிக்க உள்ளார்.

கடந்த மாதம் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த கமல் இனி மேல் ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்கள், மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ரஜினி நாளை முதல் மாவட்ட வாரியாக ரசிகர்ளை ரஜினி ரசிகர்களை சந்திக்கிறார்.

வரும் ஜனவரி மாதம் அரசியல் காட்சி பற்றி அறிவிப்பு வரும் என்று ரஜினிக்கு நம்பத்தகுந்த வட்டாரம் கூறுகின்றனர். ஆகமொத்தத்தில் சினிமா வாழ்க்கையில் சகபோட்டியாளராக இருந்துவந்த ரஜினி கமல் அடுத்த வருடம் முதல் அரசியல் களத்திலும் போட்டியாளராக குதிக்கவுள்ளனர்

 


Post your comment





Related News
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions