ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்

Bookmark and Share

ரஜினியை மட்டும் பின்தொடரும் விஷால்

தமிழ் சினிமா நடிகர்கள் ஒவ்வொருவரும் தன் சக நடிகர்கள் என்ன மாதிரியான படங்களில் நடிக்கின்றனர். எந்தமாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்கின்றனர் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள ஆசைப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்றால், அதில் அந்த நடிகர் எந்தமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தினார். அவருடைய நடிப்பை பின்பற்றி தன்னுடைய படத்தையும் வெற்றி பெற வைக்கவேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு நடிகரின் மனதிலும் இருந்து வருகிறது.

ஆனால், விஷாலோ எந்த நடிகரையும் பின்பற்றாமல், ரஜினியை மட்டுமே பின்தொடர்ந்து வருகிறார். விஷால் இவ்வாறு பின்தொடர்வது டுவிட்டரில்தான். அட, ஆமாங்க.

சமீபத்தில்தான் விஷால் டுவிட்டரில் இணைந்தார். டுவிட்டரில் இணைந்தது முதல், தன்னுடைய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், தான் நடிக்கும் விளம்பரத்தின் டிரைலர் மற்றும் ரசிகர்களோடு நேரடியாக உரையாடுவது, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் என அனைவற்றையும் டுவிட் செய்து வருகிறார்.

இதுநாள் வரை விஷாலை 18 ஆயிரம் பேர் பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால், விஷாலோ ஒருவரை மட்டும்தான் பின்தொடர்ந்துள்ளார். அந்த ஒருவர் யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். மற்ற நடிகர், நடிகைகளை இதுவரை அவர் தொடரவில்லை.

இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை. ஒருவேளை படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருப்பதால், இதில் கவனம் செலுத்த தவறியிருக்கிறாரா? என்பதும் தெரியவில்லை. 


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
அடையாளம் தெரியாதபடி மாறிய ரஜினி - அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions