ரஜினியை விமர்சித்த ஸ்டாலின், கலைஞருடன் சந்திப்பில் நடந்தது என்ன?

Bookmark and Share

ரஜினியை விமர்சித்த ஸ்டாலின், கலைஞருடன் சந்திப்பில் நடந்தது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களின் சந்திப்பின் போது தான் அரசியலுக்கு தனி கட்சி தொடங்கி 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என கூறி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருந்தார்.

இதனையடுத்து ரஜினி மன்றம் என ஒரு இணையதள பக்கத்தையும் உருவாக்கி இருந்தார், மும்மரமாக அரசியல் களத்தில் இறங்கி உள்ள சூப்பர் ஸ்டார் நேற்று மாலை திமுக தலைவரும் மூத்த அரசியல் வாதியுமான கலைஞர் மு.கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

மேலும் இது கூட்டணிக்கான சந்திப்பு இல்லை, மரியாதைக்காக சந்திப்பு என ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன, இந்த சந்திப்பினை அடுத்து மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

 ரஜினிக்கு ஆதரவு கொடுப்பதா? இல்லையா? என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என கூறிய ஸ்டாலின் இதுவரை திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்தவர்கள் பலரும் தோற்று போன வரலாறு அனைவருக்குமே தெரியும் என கூறி ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions