நடிகர் ரஜினி, லிங்கா பட தயாரிப்பாளர் மீது புகார்: வழக்கு பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு

Bookmark and Share

நடிகர் ரஜினி, லிங்கா பட தயாரிப்பாளர் மீது புகார்: வழக்கு பதிவு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு

நடிகர் ரஜினி, லிங்கா பட தயாரிப்பாளர் மீதான புகாரை, பதிவு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள, மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின், நிர்வாக பங்குதாரர் சிங்கார வடிவேலன் தாக்கல் செய்த மனு:

வினியோக உரிமை: நடிகர் ரஜினி நடித்த, லிங்கா படத்துக்கு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான, வினியோக உரிமை பெற்றிருந்தேன். படத்தை, வினியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி திரையிட்டு காட்டவில்லை. படம் நன்றாக ஓடும் என்றும் தோல்வியடைந்தால், பணத்தை ஈடு செய்வதாகவும், வினியோகஸ்தர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அதை நம்பி, 8 கோடி ரூபாய் அளித்தேன்.

சூப்பர் ஸ்டார் படம் என்பதால், தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும், பணத்தை தந்தனர். ஆனால், லிங்கா படத்தை திரையிட்டதன் மூலம், குறைந்த அளவே வசூலானது. தியேட்டர் உரிமையாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது.

தியேட்டர் உரிமையாளர்கள், இழப்பீடு தொகையை தரும்படி, என்னிடம் கேட்டனர். படத்தை திரையிடுவதற்கு முன், எங்களுக்கு திரையிட்டுக் காட்டியிருந்தால், வினியோகஸ்தர்கள் இவ்வளவு தொகையை கொடுத்து இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் வெங்கடேஷையும், ரஜினியையும், நாங்கள் அணுகினோம்.

வாய்மொழி உத்தரவாதத்தின்படி, இழப்பீடு தருமாறு கேட்டோம். வினியோகஸ்தர்களுக்கு, 33 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனக்கு மட்டும், 4.5 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, படத்தை வெளியிட்டதன் மூலம், லாபம் அடைந்ததாக, வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

தகுதி இல்லை: மேலும், இந்த பிரச்னை தொடர்பாக முடிவு எடுக்குமாறும், தேவையானவற்றை செய்யுமாறும், ரஜினி அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். இதன் மூலம், ரஜினியின் உத்தரவுப்படி, வெங்கடேஷ் செயல்படுவது தெரிகிறது.

ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்தி, கேளிக்கை வரி விலக்கை, தயாரிப்பாளர் பெற்றார். அந்தப் படம், கேளிக்கை வரி விலக்கு பெற தகுதியில்லை. படத்தின் பெயரான, லிங்கா, சமஸ்கிருத வார்த்தை.

கேளிக்கை வரி விலக்கு பெற்றதன் மூலம், தயாரிப்பாளரும், நடிகரும், அரசுக்கு, 21 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். தயாரிப்பாளர் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த, 3ம் தேதி, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில், புகார் அளித்தேன்.

இந்தப் புகாரை பதிவு செய்யும்படி, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, வரும், 9ம் தேதி, விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment

Related News
ரஜினியின் லிங்காவால் ரூ. 30 கோடிக்கு நஷ்டம்... விநியோகஸ்தர்கள் போர்க்கொடி!
உலகெங்கும் நாளை பிரமாண்டமாய் வெளியாகிறது ரஜினியின் லிங்கா!
லிங்கா யாருடைய கதையையும் காப்பியடித்து எடுக்கப்பட்டதல்ல! - ரஜினி பேச்சு
த்ரிஷாவின் திருமணத்துக்கு சிக்கல்கொடுத்த ரஜினி,அஜித்...?
ரஜினி முதல்வராக வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு: அமீர் பரபரப்பு பேச்சு
லிங்கா இசை விழா...யு டியூப் ஒளிபரப்பு ரத்து...!
என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது ரஜினி அறிவுரை! - சோனாக்ஷி
லிங்காவை ரூ 165 கோடிக்கு வாங்கியது ஈராஸ்!
ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது!
ரஜினிக்கே ஷாக் கொடுத்த ‘ரஜினி’....
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions