ரஜினியை சந்தித்த லைக்கா நிறுவன தயாரிப்பாளர்

Bookmark and Share

ரஜினியை சந்தித்த லைக்கா நிறுவன தயாரிப்பாளர்

அமெரிக்காவில் ஓய்வு எடுத்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினி, ஷங்கர் இயக்கி வரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜு மகாலிங்கமும் உடனிருந்தார். அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய ரஜினியை நலம் விசாரிப்பதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ரஜினி நடிக்கும் ‘2.ஓ’  படத்தில் கதாநாயகியகாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

மேலும், இப்படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன், வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions