ரிலீஸானது ரஜினி முருகன் டிரைலர் !

Bookmark and Share

ரிலீஸானது ரஜினி முருகன் டிரைலர் !

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில், இமான் இசையமைப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினி முருகன் திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

2 நிமிடம் 26 நொடிகள் கொண்ட அந்த டிரைலரில் படத்தில் என்ன இருக்கிறது என்ற விஷயத்தை விறுவிறுப்பாகவும், சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். 

அதோடு, டிரைலர் மிகவும் தெளிவாகவும், அழகான ஒளியமைப்புடனும் இருப்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தை பாராட்ட வேண்டும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிக் கூட்டணி என்பதால் ரஜினி முருகன் படத்திற்கு நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.

டிரைலரைப் பார்த்ததுமே இது ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் படம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். ஒரு அருமையான குடும்பப் பின்னணியில் நகைச்சுவை கலந்த கொண்டாட்டமான காதல் படம் இது என்பது மட்டும் டிரைலரைப் பார்த்ததும் புரிகிறது. 

சிவகார்த்திகேயன் வழக்கம் போலவே உற்சாகத்துடனும் அதற்கு மேலும் உரமாக சூரியின் நகைச்சுவை நடிப்பும் அமைந்துள்ளது. அருமையான குணச்சித்திரத்திற்கு ராஜ்கிரண், மிரட்டலான வில்லத்தனத்திற்கு சமுத்திரக்கனி என புதிய கூட்டணி இந்தப் படத்தில் அமைந்து எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது.

சிவகார்த்திகேயனுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையிலான காதல் காட்சிகள் நன்றாகவே ரசிக்கும் வகையில் அமந்துள்ளது. , தாத்தா கதாபாத்திரத்தில் வரும் ராஜ்கிரண் ஒரு சில வினாடிகள் மட்டுமே டிரைலரில் வருகிறார். 

போகிற போக்கில் சமுத்திரக்கனியையும் முழு நேர வில்லனாக்கி விடுவார்கள் போல. இமான் இசையில், யுகபாரதியின் வரிகளில் மீண்டும் ஒரு ஹிட் ரெடியாகியுள்ளது. மொத்தத்தில் ரஜினி முருகன் அடுத்த வசூல் வேட்டைக்குத் தயாராகிவிட்டது.


Post your comment





Related News
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions