பொங்கல் ரேசில் களமிறங்கும் ரஜினி முருகன்!

Bookmark and Share

பொங்கல் ரேசில் களமிறங்கும் ரஜினி முருகன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ கடந்த தீபாவளிக்கே வெளியாவதாக இருந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிப் போனது. 

இந்நிலையில், கடந்த டிசம்பர் 4-ந் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், சென்னையில் பெய்த திடீர் கனமழையால் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் தயக்கம் காட்டினர். மேலும், தியேட்டர்களில் வெள்ளம் புகுந்ததால் திரையரங்கு உரிமையாளர்களும் படங்களை வாங்குவதில் பின்வாங்கினர். 

இதையடுத்து 4-ந் தேதியும் படம் வெளிவராமல் போனது. அதன்பின்னர் டிசம்பர் 4-ந் தேதி வெளியாகவேண்டிய படங்கள் அடுத்த வாரமே திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ‘ரஜினிமுருகன்’ படம் மட்டும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் தற்போது இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறித்துள்ளனர். ஏற்கெனவே பொங்கலுக்கு விஷாலின் ‘கதகளி’, ஜெயம் ரவியின் ‘மிருதன்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை-2’  பாலாவின் ‘தாரை தப்பட்டை’ என நிறைய படங்கள் களமிறங்கியுள்ள நிலையில், தற்போது ரஜினிமுருகனையும் தைரியமாக களத்தில் இறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions