ஜூலை 17 அன்று ரஜினிமுருகன் ரிலீஸ்

Bookmark and Share

ஜூலை 17 அன்று ரஜினிமுருகன் ரிலீஸ்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தற்போது உத்தமவில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவை தவிர பாலாஜி சக்திவேல், ரேணிகுண்டா பன்னீர்செல்வம், லிங்குசாமி, பிருந்தாசாரதி இயக்கும் படங்களின் ப்ரீ புரடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

உத்தமவில்லன் திட்டமிட்ட தேதியில் வெளியாகி இருந்தால் ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து படங்களின் பணிகளும் சரியாக நடந்திருக்கும். உத்தமவில்லன் படத்தை திட்டமிட்ட தேதியில் முடிக்காமலும், வெளியீட்டு தேதியை அடிக்கடி கமல் மாற்றியதாலும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் அனைத்து படங்களின் தேதிகளும் தள்ளிப்போய்விட்டன.

குறிப்பாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தை கோடைவிடுமுறையில் அதாவது மேமாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர். உத்தமவில்லன் ஏப்ரல் 14 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதால் ரஜினிமுருகன் படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டுவிட்டது.

தற்போதைய நிலவரப்படி, ரஜினிமுருகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏப்ரல் 25 அன்று வெளியிட உள்ளனர். படத்தின் ஆடியோவை ஜூன் 7 அன்று வெளியிடுகின்றனர். ஜூலை 17 அன்று ரஜினிமுருகன் படம் ரிலீஸ் ஆகிறது.


Post your comment





Related News
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions