ரஜினி பிறந்தநாளில் ரஜினிமுருகன் படம்?

Bookmark and Share

ரஜினி பிறந்தநாளில் ரஜினிமுருகன் படம்?

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஜினி முருகன். இப்படத்தில் காதநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க, இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

முதலில் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுவதாக இருந்தது. ஆனால் தற்போது திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட இருக்கிறது.

இந்நிலையில், இப்படம் முன்பே ரிலீஸ் ஆக வேண்டியது. சில தயாரிப்பளார்களின் பணம் பிரச்சனையால் படம் ரிலீஸ் ஆகமால் இருந்தது. அதனால் இப்படத்தின் தமிழ்நாட்டின் உரிமையை மட்டும் கைப்பற்றி இருக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனம், உங்கள் உடைய கடன் பிரச்சினைகளை எல்லாம் முடித்து விடுங்கள், நாங்கள் இப்படத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியிட்டு தருகிறோம் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளனர்.

ரஜினி முருகன் படத்தை அடுத்த மாதம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியிட இருந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்தது. ஆனால், அன்று  சவுகார்பேட்டை, பசங்க-2,  ஈட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால்  ரஜினி முருகன் படத்திற்கு அதிகமாக திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.

ரஜினி முருகன் படம் வெளியாவதற்கு சிவகார்த்திகேயன் தன்னால் முடிந்தளவு முயற்சி செய்துவிட்டு, முடியாமல் போனதால் தான் தனது அடுத்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய மும்முரமாக இறங்கிவிட்டாராம்.

இந்நிலையில் இப்படத்தை தற்போது ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 11ம் தேதி வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள் படக்குழுவினர்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions