ரஜினி முருகன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ்?

Bookmark and Share

ரஜினி முருகன் ஆகஸ்ட்  24 ஆம் தேதி ரிலீஸ்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன்  நடித்துள்ள, ரஜினி முருகன் படத்தின் ரிலீஸ் பற்றி தினம் தினம் விதவிதமான செய்திகள் அடிபடுகின்றன.

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரும் ஹீரோவும் மீண்டு கூட்டணி அமைத்துள்ள படம் என்பதால் ரஜினி முருகன் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

குறித்த நேரத்தில் படம் வெளியாகததினால் ரஜினி முருகன் படம் குறித்த எதிர்பார்ப்பு மெல்ல மெல்ல வடிந்து வருகிறது.  படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளநிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. ரசிகர்கள் மத்தியில் அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

சிவகார்த்தியேனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான்  இசை அமைத்துள்ளார். உத்தமவில்லன் படத்தைத் தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு பணச்சிக்கல் ஏற்பட்டதால் அடுத்து வெளியாக வேண்டிய ரஜினிமுருகன் படத்துக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதிய தகவல் ஒன்று காதில் விழுகிறது. இப்படத்தை  அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி ரிலீஸ் செய்ய லிங்குசாமி திட்டமிட்டுள்ளாராம்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions