கீர்த்தி சுரேஷுக்கு செம ஜுரம்... லீவில் போன "ரஜினி முருகன்"..பாம்புச் சட்டைக்கும் "ரெஸ்ட்"!!

Bookmark and Share

கீர்த்தி சுரேஷுக்கு செம ஜுரம்... லீவில் போன

கீர்த்தி சுரேஷுக்கு செம ஜுரம்... லீவில் போன "ரஜினி முருகன்"..பாம்புச் சட்டைக்கும் "ரெஸ்ட்"!! காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரஜினி முருகன் படப்பிடிப்பிற்கு தற்காலிக விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'ரஜினி முருகன்' படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ரஜினிமுருகன் படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், சமீபத்தில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக மதுரையில் படமாக்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜினிமுருகன்' படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும், மருத்துவர் அவருக்கு சில நாட்கள் பூரண ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதாலும், படப்பிடிப்பு சில நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், அவர் குணமடைந்து திரும்பி வந்ததும், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபுவுடன் நடித்த 'இது என்ன மாயம்' படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் உடல்நலம் சரியில்லாத ரஜினி முருகன் படம் மட்டுமின்றி அவர் பாபி சிம்ஹா உடன் நடித்து வரும் பாம்புச்சட்டை படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions