ரஜினி முருகன், மாரி ஒரே நாளில் இசை வெளியீடு...!

Bookmark and Share

ரஜினி முருகன், மாரி ஒரே நாளில் இசை வெளியீடு...!

தனுஷ் நாயகனாக நடித்த 3 படத்தில் அவருடைய நண்பராக நடித்தார் சிவகார்த்திகேயன். நிழல் நண்பனாக நடித்தவர் அப்படியே நிஜ நண்பனாகவும் நெருக்கமான நண்பனாகவும் மாறினார்.
அதன் பின் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க எதிர் நீச்சல், காக்கி சட்டை ஆகிய படங்களை தனுஷே தயாரித்தார். இடையில் சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் சண்டை என அதிகமாகவே செய்திகள் கிளம்பின. ஒரு கட்டத்தில் இருவருமே அப்படியெல்லாம் எதுவுமில்லை, நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லுமளவிற்கு ஆகிப் போனது.
இப்போது சிவகார்த்திகேயனும் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துவிட்டார். சிவகார்த்திகேயன் இப்போது நடித்து முடித்துள்ள ரஜினி முருகன் படத்தின் இசை வெளியீட்டை அடுத்த மாதம் 7ம் தேதி நடத்தப் போவதாக எப்போதோ அறிவித்தார்கள். நேற்றுதான் அந்த இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடக்கும் என தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே தனுஷ் தற்போது நடித்துள்ள மாரி படத்தின் இசை வெளியீட்டையும் ஜுன் 7ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
ரஜினி முருகன் இசை வெளியீட்டுத் தேதி எப்போதோ அறிவிக்கப்பட்ட ஒன்று.
ஆனால், நேற்று திடீரென மாரி படத்தின் இசை வெளியீட்டையும் அதே தேதியில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது தற்செயலான விஷயமல்ல. இதனால், சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாக தனுஷ் களமிறங்குகிறாரே என கோலிவுட்டில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions