திரையில் இன்னும் 3-தினங்களில் விருந்து கொடுக்க வரும் ரஜினி முருகன் !

Bookmark and Share

திரையில் இன்னும் 3-தினங்களில்  விருந்து கொடுக்க வரும் ரஜினி முருகன் !

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரஜினி முருகன்.

இப்படத்தில் காதநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க, இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ரஜினி முருகன் படம் அடுத்த மாதம் டிசம்பர் 4-ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு முன்பு படம் எப்போது வெளியாகும்…எப்போது வெளியாகும்…என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருந்தது.

ஏனெனில், இதற்கு முன்பு இந்த படக்குழுவினரின் கூட்டணியில் உருவான வருத்தபடாத வாலிபர் சங்கம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

எனவே இப்படதிற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. மேலும் இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ்  அளித்துள்ளதால், படக்குழுவினருக்கும் இது மேலும் ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. இப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ரசிகர்கள் இப்போதே போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions