'ரஜினி முருகன்' வரட்டும்! : 10 கோடிக்கு ப்ளான் போட்ட சிவகார்த்திகேயன்

Bookmark and Share

'ரஜினி முருகன்' வரட்டும்! : 10 கோடிக்கு ப்ளான் போட்ட சிவகார்த்திகேயன்

ரிலீசாகிற படங்கள் எல்லாமே அடுத்தடுத்து வசூலை வாரிக்குவிக்க ரொம்பவே உற்சாகத்தோடு காணப்படுகிறார் சிவகார்த்திகேயன். வருகிற எல்லா வாய்ப்புகளுக்கும் அட்வான்ஸ் பணத்தை வாங்கி நிரப்பாமல் முறையாக கதை கேட்டு அது பிடித்திருந்தால் மட்டுமே கால்ஷீட் கொடுக்கிறார்.

அப்படிப்பட்ட சிவகார்த்திகேயனின் கேரியரில் பெரும் வசூலைக் குவித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.சிவகார்த்திகேயன்  ஸ்ரீதிவ்யா நடிப்பில் பொன்ராம் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதனால் மீண்டும் அதே பொன்ராமுடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் இணைந்திருக்கிறார்.சமீபத்தில் ரிலீசான ‘காக்கி சட்டை’ படமும் நல்ல வசூலோடு ஓடிக்கொண்டிருப்பதால் கூட்டி கழித்துப் பார்த்த அவர் இப்போதைக்கு புதிதாக எந்தப்படத்தையும் கமிட் செய்யாமல் ரஜினி முருகன் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

ஏனாம்?

தற்போதைக்கு 6 கோடி வரை சம்பளம் வாங்கிக் கோண்டிருக்கும் சிவகார்த்திகேயன் 'ரஜினி முருகன்'  கண்டிப்பாக ஹிட்டாகும் என்று உறுதியாக நம்புவதாக அந்தப்படம் ரிலீசுக்குப் பிறகு தனது சம்பளத்தை 10 கோடியாக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதனாலேயே யார் கதை சொல்ல வந்தாலும் ரஜினி முருகன் ரிலீசுக்கு அப்புறம் பார்ப்போம் என்கிறாராம்.புத்திசாலிப்புள்ளைக்கு பொழைக்க கத்துக்குடுக்கணுமா என்ன?


Post your comment





Related News
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions