ரஜினி முருகன் ரிலீஸ் தேதி மாற்றம்... வருத்தத்தில் சிவகார்த்திகேயன்

Bookmark and Share

ரஜினி முருகன் ரிலீஸ் தேதி மாற்றம்... வருத்தத்தில் சிவகார்த்திகேயன்

ஒரு படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்வார்கள். இப்போதெல்லாம் வெளியீட்டு தேதியை படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரஜினி முருகன்'  படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனதினர் தங்களின் தயாரிப்பான 'ரஜினி முருகன்' படத்தை மே 1ஆம் தேதி அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கியது. 'ரஜினி முருகன்' படத்தை மே 1ஆம் தேதி வெளியிட்டால் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ் படத்தின் வெளியீட்டு தேதி சிக்கலுக்குள்ளாகும் என்பதால், ரஜினி முருகன் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளது.

மே 1ஆம் தேதியிலிருந்து  ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் கழித்து அதாவது ஜூலை 17ஆம் தேதி (ரம்ஜான் பண்டிகை வாரம்) 'ரஜினி முருகன்' படத்தை ரிலீஸ் செய்கிறது ஸ்டுடியோ கிரீன்.

அதற்கு முன்பாக 'ரஜினி முருகனின்' ஃபர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் விஜய் அவார்ட்ஸ் விழாவில் வெளியிடுகிறார்கள். அதோடு டி.இமான் இசையமைப்பில் உருவாகும் பாடல்களை ஜூன் 7ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தன் படத்தை இத்தனை தாமதமாக வெளியிடுவது பற்றி சிவகார்த்திகேயன் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions