இன்று 'ரஜினி முருகன்' ஃபர்ஸ்ட் லுக்

Bookmark and Share

இன்று 'ரஜினி முருகன்' ஃபர்ஸ்ட் லுக்

'காக்கி சட்டை' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'ரஜினி முருகன்'. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன்- பொன்ராம் மீண்டும் இணைந்துள்ள 'ரஜினி முருகன்' படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே அனைத்து ஏரியாக்களும் விற்று புதிய சாதனையை படைத்தது.

சுமார் 40 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படும் 'ரஜினி முருகன்' படத்தில் முன்னாள் தமிழ் நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதுநாள் வரை இந்தப் படத்தின் ஒரு புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. ஒரு சில படப்பிடிப்புப் புகைப்படங்கள் மட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

'காக்கி சட்டை' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை முறியடித்தது என்று சொல்கிறார்கள். இப்போது 'காக்கி சட்டை' படத்தின் வசூலையும் 'ரஜினி முருகன்' முறியடிக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்.

முன்னரே அறிவித்தபடி இன்று 'ரஜினி முருகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்கள். அடுத்து ஜுன் மாதம் 7ம் தேதி இசை வெளியீட்டையும், ஜுலை மாதம் 17ம் தேதி படத்தையும் வெளியிட உள்ளார்கள்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions