பொங்கல் ரேஸில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

Bookmark and Share

பொங்கல் ரேஸில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்!

ரஜினிமுருகனால் தொடர்ந்து சிக்கலில் சிக்கி தவித்து வந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு, மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது உதவி செய்ய முன்வந்திருக்கிறது.

இதன் மூலம் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் தினசரிகளின் விளம்பரங்களில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பென் மூவிஸ் நிறுவனத்தின் லோகோவும் பளிச்சிடுகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றதால் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர் பொன்ராம் மற்றும் இசையமைப்பாளர் இமான் நால்வரும் இணைந்த ரஜினிமுருகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ரஜினிமுருகன் மீதுள்ள நம்பிக்கையால் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதமே திரைக்கு வரவேண்டிய ரஜினிமுருகன் படம் லிங்குசாமிக்கு ஏற்பட்ட கடன் தொல்லைகள் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போனது.கடைசியாக டிசம்பர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை, வெள்ளம் காரணமாக மீண்டும் ரஜினிமுருகன் தள்ளி வைக்கப்பட்டது.

ஒருவழியாக பொங்கல் தினத்தில் ரஜினிமுருகன் வெளியாகும் என்று தினசரிகளில் படக்குழுவினர் விளம்பரம் அளித்து வந்தனர். ஆனால் சில நாட்களாக இந்த விளம்பரம் நிறுத்தப்பட்டதால் படம் பொங்கலுக்கு வெளியாகுமா? என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பென் மூவிஸ் நிறுவனம் தற்போது ரஜினிமுருகன் படத்திற்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறது.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பென் மூவிஸ் ரஜினிமுருகனை வெளியிடுகிறது. பென் மூவிஸ் லோகோவுடன் ரஜினிமுருகன் படத்தை தற்போது படக்குழுவினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

பாலிவுட் படங்களை வாங்கி விநியோகம் செய்து வரும் நிறுவனம் தான் இந்த பென் மூவிஸ். மேலும் லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் பையா படத்தின் இந்தி ரீமேக்கையும் பென் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions