கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவரா? - அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.!

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக இவரா? - அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.!

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது காலா, 2 பாயிண்ட் O படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டாருடன் சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ஜோடி சேர்நது நடித்திருந்தார். மேலும் இந்தியன்-2 படத்திலும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

நயன்தாரா இந்த படத்தில் நடிப்பது உறுதியானால் ஒரே நேரத்தில் ரஜினி, கமல், அஜித் ஆகியோருடன் நடித்த பெருமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions