சந்திரமுகி 2 தலைப்பு மாறியது!

Bookmark and Share

சந்திரமுகி 2 தலைப்பு மாறியது!

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’. இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இவர் சமீபத்தில் கன்னடத்தில் ‘சிவலிங்கா’ என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதை ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இயக்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது ‘சிவலிங்கா’ பெயரிலேயே தமிழில் படம் இயக்குவதாக பி.வாசு அறிவித்திருக்கிறார்.

‘சிவலிங்கா’ படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் நடிக்கிறார்.

இவர்களுடன் மிக முக்கிய வேடத்தில் சந்திரமுகிக்கு பிறகு மீண்டும் பி.வாசுவுடன் இணைகிறார் வடிவேலு. மேலும் மிக முக்கிய வேடத்தில் ஷக்திவேல் வாசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான மிருதன் உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த ஆர்.ரவீந்திரன் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து பெங்களூர், மைசூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.


Post your comment





Related News
தீபாவளிக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் சிறப்பு விருந்து
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
எப்படி இருந்த தல பட நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions