காவிரி பிரச்சினை: சென்னையில் ரஜினி, பிரபுதேவா வீடுகளுக்கு பாதுகாப்பு

Bookmark and Share

காவிரி பிரச்சினை: சென்னையில் ரஜினி, பிரபுதேவா வீடுகளுக்கு பாதுகாப்பு

காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தமிழர்களின் வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.

இதையடுத்து, தமிழ்நாட்டிலும் ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. கர்நாடகத்தைச் சேர்ந்த பஸ், கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக நிறுவனங்கள், பிரபலங்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
நடிகர்கள் ரஜினி, பிரபு தேவா, பிரகாஷ்ராஜ், அர்ஜுன், ரமேஷ் அரவிந்த் ஆகியோருக்கு சென்னையில் வீடுகள் உள்ளன. இவர்களுடைய வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரபல நடிகர்களுக்கு சென்னை நகரில் வீடுகள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில்தான் தங்கி இருக்கிறார்கள். எனவே, அந்த வீடுகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தவிர கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகைகள், துணை நடிகர்- நடிகைகள் தங்கி இருக்கும் இடங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள் தொடர்பான படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions