ரஜினியை என் படத்தில் இழிவு படுத்தவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் விளக்கம்

Bookmark and Share

ரஜினியை என் படத்தில் இழிவு படுத்தவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் விளக்கம்

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடுகேட்ட விநியோகஸ்தர்கள் இணைந்து புதுபடம் தயாரிக்கின்றனர். ‘லிங்கா’ பட சர்ச்சையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக செய்திகள் பரவி உள்ளன. இதில் ரஜினியை அவமதிப்பது போன்று காட்சிகள் இடம் பெறுவதாகவும் ரஜினி வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அவரை வைத்து ரஜினியை கேலி செய்யும் காட்சிகளை எடுக்கிறார்கள் என்றும் கிசுகிசுத்தனர்.

இது குறித்து பவர் ஸ்டார் சீனிவாசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

லிங்கா விநியோகஸ்தர்கள் எடுக்கும் படத்தில் நான் கதாநாயகனாக நடிப்பது உண்மைதான். இது முழுக்க காமெடி படம். யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்காது.

இந்த படத்தின் கதையானது தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் எனக்கு திடீரென ஒரு படம் தோல்வி அடைகிறது. அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தேனா என்பது கதை. காமெடி கதையம்சம் உள்ள படமாகத்தான் இதை எடுக்கிறோம். ஆகஸ்டில் படப்பிடிப்பு நடக்கிறது.

இந்த படத்தில் ரஜினியை அவமதிப்பது போன்ற காட்சிகள் எதுவும் இல்லை. இதை நிபந்தனையாக வைத்துதான் இந்த படத்திலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

ரஜினியின் பிரபல பாடலான வந்தேன்டா பால்காரன் பாடல் வந்தேன்டா பவர்காரன் என மாற்றப்பட்டு இந்த படத்தில் இடம் பெறுகிறது.

இவ்வாறு கூறினார்.

இந்த படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக நடிக்க சதாவிடம் பேசி வருகின்றனர்.


Post your comment





Related News
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விக்ரம்?
20 லட்சம் தொடர்பாளர்கர்களை ஏமாற்றும் ரஜினிகாந்த்...!
பொங்கலை முன்னிட்டு... மீண்டும் வெளிநாடுகளில் ரிலீசானது லிங்கா... இணையதளத்தில்!
லிங்கா படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்
வழக்கு எண் 18/9 படத்தினை பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி
கோச்சடையானுக்காக இந்தியிலும் பாடிய ரஜினி!
ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - தனுஷ் அதிரடி
மீண்டும் பி வாசு இயக்கத்தில் ரஜினி?
சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க நடிகர் ரஜினிகாந்த் நன்கொடை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions