கபாலி படம் யு சான்றிதழுடன் ஜூலையில் ரிலீஸ்!

Bookmark and Share

கபாலி  படம் யு சான்றிதழுடன் ஜூலையில் ரிலீஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் கபாலி. சென்சாருக்காக படம் இன்று தணிக்கைத் துறை அதிகாரிக்களுக்கு திரையிடப்பட்டது. 

ரஜினியின் கபாலி, சென்சார் அதிகாரிகளின் கத்திரியிலிருந்து தப்பித்து, க்ளீன் யு சன்றிதழ் பெற்றிருக்கிறது. கபாலி படத்தின் மொத்த நேரம் 152 நிமிடம். அதாவது  2:32 மணி நேரம். இதை தாணு ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

படத்திற்கு சென்சார் நடைபெற்றப்பின்னரே படத்தின் தேதியை வெளியிடுவதில் உறுதியாக இருந்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. இந்நிலையில் இன்று சென்சார் சென்று யு சான்றிதழ் பெற்றுள்ளதால், படத்திற்கான ரிலீஸ் தேதியை விரைவில் வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது.

தகவலின்படி, ஜூலை 22ம் தேதியே படம் ரிலீஸாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியுடன் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், கிஷோர் மற்றும் வில்லனாக தைவான் நடிகர் வின்ஸ்டன் சாவோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions