ரஜினி மண்டபத்தில் சரத்குமார்!

Bookmark and Share

ரஜினி மண்டபத்தில் சரத்குமார்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் வருகிற 18 என அறிவிப்பு வந்தவுடன் சரத்குமார் அணியும், விஷால் அணியும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

அக்டோபர் 2ஆம் தேதி விஷால் அணி ஆதரவு கூட்டத்தை மிக பிரமாண்டமாக நடத்தியது. இந்நிலையில் சரத்குமார் அணியின் ஆதரவு கூட்டத்தை வருகிற 16 ஆம் தேதி ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தவுள்ளனர்.

இதை தொடர்ந்து ரஜினியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

அணி விவரம்:-

தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் ஆகியோர் சரத்குமார் அணியில்  போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் விஷால் அணியில் போட்டியிடுகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions