ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த சரத்குமார்

Bookmark and Share

ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்த சரத்குமார்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில்  நடிகர் ரஜினிகாந்தை சரத்குமார் நேற்று சந்தித்து பேசினார். இந்த தேர்தலில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர் அணி சார்பில் நடிகர் விஷால் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரஜினிகாந்தை சரத்குமார் சந்தித்து திரை துறையின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். நேற்று காலை 10-30 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் அவரை சரத்குமார் மீண்டும் சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதுபற்றி சரத்குமாரிடம் கேட்டபோது:-

‘‘ரஜினிகாந்தை நான் சந்தித்து பேசியது உண்மைதான். அவர் நடிக்கும் புதிய படமான ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு பற்றியும், இதற்காக அவர் வெளிநாடு செல்வது பற்றியும் அவரிடம் கேட்டறிந்தேன். அடுத்து, தமிழ் திரையுலகில் நிலவும் தற்போதைய பிரச்சினைகள் பற்றியும், வர இருக்கும் நடிகர் சங்க தேர்தல் பற்றியும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்றார்.’’ 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions