மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!

Bookmark and Share

மீண்டும் 2.0 படப்பிடிப்பில் இணையும் ரஜினி!

கபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிறிது காலம் படப்பிடிப்பில் இருந்து ப்ரேக் எடுத்துவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அதேநேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2.o படத்துக்கான மேக்கப் டெஸ்ட்டிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இவர் சென்னை திரும்பியிருப்பதாகவும் இதைத்தொடர்ந்து ஜூலை இரண்டாம் வாரத்தில் அவர் 2.0 படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions