சிந்து தாயாரை கண்கலங்க வைத்த ரஜினி!

Bookmark and Share

சிந்து தாயாரை கண்கலங்க வைத்த ரஜினி!

ரியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து.

இவரை இந்தியாவின் அனைத்து விஐபி-களும் பாராட்டி வருகிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் தனது டிவிட்டர் பக்கத்தில், ” ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன்” என கூறியிருந்தார்.

இதுகுறித்து சிந்துவின் தாயார் கூறியதாவது, ” அவர் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது அவர் எனது மகளின் ரசிகர் என கூறியது என்னை கண்கலங்க வைத்துவிட்டது” என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions