சிவகார்த்திகேயனுக்காக பெயரை விட்டுக்கொடுத்த ரஜினி

Bookmark and Share

 சிவகார்த்திகேயனுக்காக பெயரை விட்டுக்கொடுத்த ரஜினி

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் சிவகாத்திகேயனுக்கு தாத்தாவாக ராஜ்கிரண், வில்லனாக சமுத்திரகனி, நண்பனாக சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரித்திருக்கிறார்.

‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு டீசர் மற்றும் பாடல்கள் வெளியிட்டனர்.

விழாவில் லிங்குசாமி பேசியதாவது:-

முதலில் இப்படத்திற்கு தலைப்பு தான் வைத்தோம். ‘ரஜினி முருகன்’ என்று தலைப்பு இருப்பதால் ரஜினியிடம் இத்தலைப்பு குறித்து கூறிவிடலாம் என்று முடிவு செய்தோம். அதற்காக ரஜினியை பார்க்க அனுமதி கேட்டோம். அவர் இதற்கெல்லாம் ஏன் நேரில் வரவேண்டும், போனில் கூறுங்கள் என்று கூறினார்.

பின்னர் அவரிடம் நாங்கள் தயாரிக்கும் படத்திற்கு ‘ரஜினி முருகன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் உங்கள் பெயருக்கு இழிவு ஏற்படும் வண்ணம் நாங்கள் ஏதுவும் காட்சிகள் வைக்கவில்லை. உங்கள் பெயருக்கு எந்த அவப்பெயரும் வராது என்று சொல்ல ஆரம்பித்தேன்.

அதற்குள் அவர் ஏதும் சொல்லவேண்டாம். உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று கூறி தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.
இவ்வாறு லிங்குசாமி பேசினார். 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions