ரஜினியின் ‘2–ஓ’ படத்திற்கு ரூ.330 கோடிக்கு இன்சூரன்ஸ்!

Bookmark and Share

ரஜினியின் ‘2–ஓ’ படத்திற்கு ரூ.330 கோடிக்கு இன்சூரன்ஸ்!

ரஜினியின் ‘2–ஓ’ படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமிஜாக்ஷன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்காக ரஜினி, இயக்குனர் ஷங்கர் மற்றும் ‘2–ஓ’ படக்குழுவினர் டெல்லி சென்று இருக்கிறார்கள். சுமார் ஒரு மாதம் இங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ரஜினியின் ‘2–ஓ’ படம் தமிழ் பட வரலாற்றில் முதன் முறையாக ரூ.330 கோடிக்கு இன்சூரன்சு செய்யப்படுகிறது. நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த படம் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது.

ஏற்கனவே ஒருசில இந்தி படங்கள் தயாரிப்பின் போது இதுபோல் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன. அமீர்கான் நடிக்க ‘பிகே’ படமும், சல்மான்கான் நடித்த ‘சிக்’ படமும் ரூ.300 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டன.

இதுதவிர சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படம் ரூ.150 கோடிக்கும், சாருக்கான் நடித்த ‘தில்வாலே’ அக்ஷாய்குமார் நடித்த ‘ஏர்லிப்ட்’ படம் தலா ரூ.100 கோடிக்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது.

இப்போது ரஜினியின் ‘2–ஓ’ அதிக தொகைக்கு இன்சூரன்சு செய்யப்பட்டிருப்பது இந்திய திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்
ரஜினியுடன் நடிக்க போட்டி போடும் நடிகைகள்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
ரஜினியை இயக்குவதில் நம்பிக்கை இல்லையா? -கார்த்திக் சுப்புராஜ் பரபர பேச்சு.!
இனி ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்காதீர்கள்! - பிரபலம் பரபரப்பு பேச்சு
அடுத்த முதல்வர் ரஜினி தான் - அடித்து சொல்லும் பஞ்சாங்கம் கணிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions