பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

Bookmark and Share

பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ரியோ டி ஜெனீரோ நகரிலேயே பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

இதில் 159 நாடுகளை சேர்ந்த 4,342 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து ரியோ பாரா ஒலிம்பிக்குக்கு 19 பேர் கொண்ட வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மரியப்பன் தங்கவேலு தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் .  பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழனுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:

”பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கும் , வருணுக்கும் வாழ்த்துக்கள் " என்று பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions