காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா

Bookmark and Share

காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா

ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கி டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

கடந்த வாரம் ரஜினி மதுரைக்கார இளைஞராக தோன்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. பிளாஷ்பேக் காட்சிகளில் இந்த இளமையான தோற்றத்தில் வருகிறார். இது தொடர்பான காட்சிகள் காசி மற்றும் காசியை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி சண்டையிடுவது போன்ற காட்சியும் விஜய்சேதுபதி ஆயுதங்களுடன் ஓடுவது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது.

நேற்று படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவு 10 மணி அளவில் ரஜினிகாந்த் காசி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். வெளியில் வந்த ரஜினியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர்.

ஆனால் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ‘சாமி தரிசனம் செய்யவே வந்தேன். பேட்டியளிக்கும் எண்ணம் இல்லை’ என்று கூறி விடைபெற்று சென்றுவிட்டார். அதுபோல் திரிஷாவும் நேற்று காசி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார்.

காசியில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என்றும் அடுத்த வாரம் ரஜினி சென்னை திரும்புவார் என்றும் கூறுகிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions