வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!

Bookmark and Share

வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!

வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது, இதற்காக வைரமுத்து அவர்கள் மன்னிப்பு கேட்டும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

ஆண்டாள் விவகாரத்தால் வைரமுத்துவை எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார், இதனையடுத்து பாரதி ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய சீமான், வைரமுத்து ரஜினியை நண்பராக பார்க்கிறார், ஆனால் ரஜினி இதுவரை ஆண்டாள் பிரச்சனையில் வாய் திறக்கவே இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

 மேலும் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா என்ற வைரமுத்துவின் வரிகளால் பிரபலமானார் ரஜினி.

 இவையெல்லாம் ரஜினிக்கு வைரமுத்து போட்ட பிச்சை, இந்த விவகாரத்தில் வாய் திறந்தால் குறிப்பிட்ட சாதியினரின் ஓட்டு கிடைக்காமல் போய் விடுமென ரஜினி நினைக்கிறார். எப்போதும் தர்மத்தின் பின்பு தான் இருக்க வேண்டும் என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions