கோவாவில் ரஜினி - விஜய் சந்திக்க வாய்ப்பு?

Bookmark and Share

கோவாவில் ரஜினி - விஜய் சந்திக்க வாய்ப்பு?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் கபாலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடந்துவருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் ஆரம்பித்து பின்னர் மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்றது. ரஜினியின் மலேசியா படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. மலேசியா படப்பிடிப்பில் தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

மலேசியாவில் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி நடந்துவருகிறது. திட்டமிட்டதைவிட முன்கூட்டியே படப்பிடிப்பு தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

கபாலி படத்தின் கதாநாயகியான ராதிகா ஆப்தே கோவா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தலைவருடன் முதன்முறையாக படப்பிடிப்பில் இருப்பதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.  பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

அங்கேயே அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படத்தின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. இவ்விரண்டு படங்களுக்குமே தாணு தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களின் படப்பிடிப்புமே கோவாவில் நடைபெற இருப்பதால், ரஜினியும் விஜய்யும் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், ரஜினி – விஜய் இருவருமே தனியாக சந்தித்து உரையாடி நீண்ட நாட்கள் ஆகிறது. சமீப காலமாக இருவருமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மட்டுமே பேசியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions