ரஜினி, விஜய்க்கு அடுத்த இடம் பிடித்த விக்ரம்!

Bookmark and Share

 ரஜினி, விஜய்க்கு அடுத்த இடம் பிடித்த விக்ரம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இப்படம் விக்ரமின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முதல் வார முடிவில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 51 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதன்மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் கபாலி மற்றும் தெறிக்கு அடுத்து முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் எனும் பெயரை இரு முகன் பெற்றுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions