ரஜினி, விஜய்யை தாண்டி முதல் இடத்தில் இருக்கும் தனுஷ்!

Bookmark and Share

ரஜினி, விஜய்யை தாண்டி முதல் இடத்தில் இருக்கும் தனுஷ்!

தற்போது எல்லோரிடத்திலும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.  இதுகுறித்து ரஜினிக்கு அடுத்து வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஜய்தான் இருக்கிறார் என்பதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? என்று கேள்வி எழுந்தது.  

ரஜினி, விஜய்க்கு அடுத்து அந்த அளவிற்கு யாரும் இல்லையே என்று எண்ணிய நிலையில் தற்போது அந்த இடத்தை தனுஷ் பிடித்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்திற்குரியது.

இதற்கு சான்றாக சமூக வலைத்தளம் அதாவது டிவிட்டரைப் பொறுத்தவரையில் ரஜினியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 10 ஆயிரம். இவருக்கடுத்து தனுஷ் 29 லட்சத்து 90 ஆயிரம் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

அது மட்டுமின்றி ஃபேஸ்புக்கைப் பொறுத்தவரையில் விஜய்க்கு 53 லட்சம் தொடர்பாளர்கள் உள்ளனர். அதற்கடுத்து 40 லட்சம் தொடர்பாளர்களுடன் தனுஷ் இரண்டாமிடத்திலும் உள்ளார்.

மேலும் விஜய்க்கு  ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டையும் சேர்த்து 59 லட்சம் தொடர்பாளர்கள் உள்ளனர். ஆனால் தனுஷுக்கு இரண்டையும் சேர்த்து 69 லட்சம் தொடர்பாளர்கள் உள்ளனர்.

எனவே ரஜினி ,விஜய்யை தாண்டி சமூக வலைத்தளங்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்  தனுஷ்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions