வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்

Bookmark and Share

வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்

பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா (70) மும்பையில் இன்று காலை காலமானார். கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், 2 நாட்களுக்கு முன்னர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மும்பையில் காலமானார். 

இவருக்கு கவிதா கண்ணா என்ற மனைவியும், ராகுல், அக்‌ஷயே, சக்‌ஷி என்ற மகன்களும், ஷ்ரத்தா கண்ணா என்ற மகளும் இருக்கின்றனர். பஞ்சாப்புக்கான பாராளுமன்ற உறுப்பினரான வினோத் கண்ணா பாலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், வினோத் கண்ணா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் மை டியர் வினோத் கண்ணா.... உங்களை மிஸ் பண்ணுகிறேன். உங்களது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்த ரஜினி, அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

மேலும் பிரதமர் மோடியும் வினோத் கண்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஒரு பிரபல நடிகராக எப்போதும் நினைவில் இருப்பவர். ஒரு சிறந்த தலைவர். நல்ல மனிதர். அவரது மறைவு வேதனையை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Post your comment





Related News
மனைவி அனுஷ்காவுக்கு விராட் கோலி கொடுத்த காஸ்ட்லி பரிசு என்ன தெரியுமா? சர்ப்பிரைஸ் லீக்
அய்யய்யோ, யாரு இந்த பேய்- பிரபல நாயகியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட்
முத்தக்காட்சி நடித்திருக்கும் கணவன்- தொகுப்பாளினி அஞ்சனாவின் ரியாக்ஷன்
10வது வருடத்தில் பில்லா- விஷ்ணுவர்தன் வெளியிட்ட மாஸ் தகவல்
தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படம்- யார் நடிக்கிறார் தெரியுமா?
தனுஷ் பட நடிகையை வறுத்தெடுத்த ரசிகர்கள்
அஜித், விஜய் ரசிகர்கள் போல் மாஸ் காட்டிய ஜெயம் ரவி ரசிகர்கள்- என்ன விஷயம் தெரியுமா?
பில்லா, விசுவாசம் சூப்பர் ஸ்பெஷல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய்யை இயக்கும் ஆனந்த் ஷங்கர், ரசிகர்கள் உற்சாகம்
ஜிங்குனாமணி என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தம்: விவேகா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions