ரஜினியை சந்தித்த விஷால் குழுவினர்: நடிகர் சங்க தேர்தலுக்கு ஆதரவு கேட்டனர்

Bookmark and Share

ரஜினியை சந்தித்த விஷால் குழுவினர்: நடிகர் சங்க தேர்தலுக்கு ஆதரவு கேட்டனர்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை 2 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இதில் போட்டியிடுபவர்கள் இப்போதே ஆதரவு திரட்டி வருகிறார்கள். விஷால் அணியினர் மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று ஆதரவு திரட்டினார்கள். இப்போது சென்னையில் திரையுலக முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.

இன்று காலை 10.30 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு விஷால் குழுவினர் சென்றனர். அங்கு ரஜினியை சந்தித்து, நடிகர் சங்க தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த குழுவில் நடிகர்கள் கார்த்தி, நாசர், கருணாஸ், ரித்தீஷ், பொன்வண்ணன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இன்று மாலை விஷால் குழுவினர் நடிகர் கமலஹாசனை சந்தித்து ஆதரவு கேட்கிறார்கள். அதை தொடர்ந்து மற்ற நடிகர்–நடிகைகளை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்கள். இதனால் நடிகர் சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions