ரஜினி படத்தைத் தயாரிக்கிறேனா? - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்

Bookmark and Share

ரஜினி படத்தைத் தயாரிக்கிறேனா? - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்கும் புதுப் படத்தை நான் தயாரிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதுப் படம் குறித்து ஏகப்பட்ட செய்திகள், வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன.சமீபத்தில் அப்படி வெளியான ஒரு செய்தி.. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது.

இந்த செய்தி வெளியானதிலிருந்து ரஜினி ரசிகர்கள் அந்தப் படம் குறித்து பரவலாகப் பேச ஆரம்பித்தனர். இந்தப் படம் லிங்காவை வைத்து பிரச்சினை கிளப்பியவர்களுக்கு பெரும் பதிலடியாக அமைய வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதில் இப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.ரஜினி நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது படம் தயாரிப்பது குறித்து பேச அல்ல.

அவருக்கு நன்றி தெரிவிக்கவே. தெலுங்கில் ஐ படம் வெளியாக அவர் பெரும் உதவி செய்தார். மற்றபடி அவர் படத்தைத் தயாரிப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions