ரஜினியின் சர்ச்சையான கருத்தால் வந்த வினை

Bookmark and Share

ரஜினியின் சர்ச்சையான கருத்தால் வந்த வினை

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் 100வது பிறந்த நாளையட்டி அவரது தபால் தலை வெளியிடும் விழா நேற்று சென்னையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

நீதிபதி கைலாசத்தின் தபால் தலையை நான் பெற்றுக் கொள்வதற்கு ஒரே தகுதி, நான் அவர் குடும்பத்திற்கு நெருக்கமானவன் என்பதுதான். அவரது மனைவி சவுந்திரா கைலாசம் ஆன்மீத்தில் பெரிய ஞானம் பெற்றவர்.

இதை எங்கு பெற்றீர்கள் என்று ஒரு முறை கேட்டேன். கணவர் கைலாசத்திடமிருந்து பெற்றதாக சொன்னார். அப்படியென்றால் கைலாசம் எவ்வளவு ஞானம் பெற்றவராக இருக்க வேண்டும். அவர் பெரிய நீதிமான். இந்த நாடு நீதிமன்றங்களை நம்பித்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும். மக்கள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும். ஆனால் நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது. இவ்வாறு ரஜினி பேசினார்.

அவர் சொன்ன கருத்து என்னமோ 100% உண்மை தான், ஆனால், இதில் ஏதும் அரசியல் இருக்கிறதா? என்று வழக்கம் போல் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டாக்டர் விமலா ராமலிங்கம், நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், நல்லி குப்புசாமி செட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions