ரஜினிக்காக எதையும் இழப்போம்..எதற்காகவும் ரஜினியை இழக்க மாட்டோம்...!

Bookmark and Share

ரஜினிக்காக எதையும் இழப்போம்..எதற்காகவும் ரஜினியை இழக்க மாட்டோம்...!

இயக்குநர் ரின்கு கால்சி படைப்பில் உருவாகியுள்ள “ஃபார் தி லவ் ஆஃப் எ மேன்”மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்தை ஏன் ரசிகர்கள் இப்படிக் கொண்டாடுகிறார்கள். 

கடவுளுக்கு நிகராக அவர் மதிக்கப்படக் காரணம் என அவரின் ரசிகர்களே சொல்லும்படியாக ரஜினி மற்றும் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம்  தான் இது. இந்நிலையில் விரைவில் ரஜினிகாந்துக்குப் படத்தைப் போட்டுக்காட்டவிருக்கிறார் இயக்குநர் ரின்கு கால்சி.

அவர் பேசுகையில், “நான் ஓரிரு தினங்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷை சந்தித்தேன். நாங்கள் படம் குறித்து அறிந்தோம். இந்தப் படம் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளார். எனவே விரைவில் படம் குறித்து ரஜினிகாந்தின் கருத்துகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெளியானது, அதில் ரசிகர்கள் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போது செய்யும் சடங்குகள், பூஜைகள், ரஜினி பட நாளில் அவர் போல் கெட்டப் போட்டு செல்வது, என ரசிகர்களின் சிறப்பாக பல விஷயங்கள் இடம்பிடித்துள்ளன. அதிலும் ஒரு ரசிகர் பேசுகையில் ‘ரஜினிக்காக எதையும் இழப்போம், எதற்காகவும் ரஜினியை இழக்க மாட்டோம்” என கூறி நெகிழ்ந்துள்ளார்.

90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் மும்பை மாமி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions