நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி

Bookmark and Share

நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: ரஜினி

பணம், புகழ், ஆன்மீகம் இவற்றில் எது வேண்டுமென்று கேட்டால் ஆன்மீகம் தான் வேண்டும் என்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.சென்னை: நான் ஒரு நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கினார். பரமஹம்ச யோகானந்தரினின் "தெய்வீக காதல்" ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டார் ரஜினி.பின்னர் ரஜினி பேசுகையில், எனக்கு பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டும் என கேட்டால் நான் ஆன்மிகம் தான் வேண்டும் என கூறுவேன்.

ஆன்மிகத்தில் அதிக சக்தி கிடைக்கும் என்பதால் அதை பின்பற்ற பிடிக்கும்.நான் குழப்பவாதி இல்லை, ஆன்மீகப் பாதையில் என் முதல் குரு அண்ணன் சத்யநாராயணா. அவரது மறைவுக்கு பின்னர் பல்வேறு குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன். எனது ஆன்மீகத் தேடல் தொடந்து கொண்டே உள்ளது.

இமயமலையில் ஏராளமான ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.ராகவேந்திரரிடம் ஆன்மீகத்தை கற்றுக்கொண்டேன். நான் நடிகன் எனபதை விட ஆன்மிகவாதி என கூறிக்கொள்வதில் மிகுந்த பெருமையடைகிறேன்.

ஆன்மீக புத்தகங்களை படிப்பதில் எப்போதும் ஆர்வம் உண்டு. ஆண்டவன் வருவதற்கு மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எது நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நாம் தவறு செய்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

 


Post your comment

Related News
ரஜினியின் கபாலி பட ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?
எப்போதோ ரஜினி சொன்ன வார்த்தைகள்! இப்போதும் பிரபலம் தெரியுமா..
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!
ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?
ரஜினியை திடிரென்று சந்தித்த பிரபல அரசியல் பிரமுகர் - நடந்தது என்ன ?
ரஜினிகாந்துடன் தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு
தெறி படத்தில் நடித்ததற்காக பாராட்டிய ரஜினி?
எந்திரன் கதை வழக்கு.. கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் தரப்பு மீண்டும் வாய்தா!
ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்! என்ன சொன்னார் தெரியுமாAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions