ரஜினியை இயக்கப் போவது யார்?

Bookmark and Share

ரஜினியை இயக்கப் போவது யார்?

'லிங்கா' படத்தின் தோல்வியை மறக்கச் செய்வதற்காக ரஜினிகாந்த் அடுத்த படத்தில் உடனே நடிப்பது என முடிவெடுத்துவிட்டார். அவர் ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்று 'லிங்கா' வெளியான சமயத்திலிருந்தே செய்திகள் வர ஆரம்பித்தன.

அந்தப் படம் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் ஆமீர்கான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். பத்து நாட்களுக்கு முன்பாக கமல்ஹாசன் வில்லன் என்றும் பின்னர் விக்ரம் வில்லன் என்றும் சொன்னார்கள்.

இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிக்கப் போவதாக நேற்று திடீரென ஒரு பரபரப்பைக் கிளப்பினார்கள். ஆனால், ரஜினி நடிக்கும் படத்தைப் பற்றி பொதுவாக அவரோ, அல்லது அப்படத்தின் தயாரிப்பாளரோதான் முறைப்படி அறிவிப்பார்கள்.

ஆனால், இந்த்த் தகவலை ரஞ்சித் தரப்பிலிருந்துதான் வெளியில் சொல்லியிருப்பார்கள் என்று ரஜினிகாந்த் தரப்பு வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், ரஜினிகாந்த் அடுத்து அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாமல் நகைச்சுவைப் படமொன்றில் நடிக்கத்தான் முடிவெடுத்துள்ளார் என்றும் அதை சுந்தர்.சி இயக்கப் போகிறார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போட்டியில் 'காஞ்சனா 2' படத்தின் இயக்குனர் ராகவா லாரன்ஸ் கூட இருக்கிறார் என்கிறார்கள். இப்படி திசைக்கொரு பக்கமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றி வேண்டுமென்றே இன்னொரு நடிகர் தரப்பிலிருந்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது என்றும் திரையுலகத்தினர் சிலரும் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் ரஜினிகாந்த் தரப்பு கவனமாகப் பார்த்து வருவதாகவும் தக்க சமயத்தில் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions