அர்னால்டை சந்திக்க ரஜினிகாந்த் அமெரிக்க பயணம்!

Bookmark and Share

அர்னால்டை சந்திக்க ரஜினிகாந்த் அமெரிக்க பயணம்!

கபாலி படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மலேசியாவில் பிசியாக இருக்கிறார். தீபாவளிக்கு அவர் சென்னை வருவது சந்தேகமாக இருப்பதால் அவரது குடும்பத்தினர் ரஜினியுடன் தீபாவளி கொண்டாட மலேசியா செல்ல இருக்கிறார்கள். 

இந்த நிலையில் மலேசியாவிலிருந்து நியூயார்கிற்கும், அங்கிருந்து மலேசியாவிற்கும் அவருக்கு விமான டிக்ககெட் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் ரஜினி வருகிற 26ந் தேதி அமெரிக்க சென்று அங்கு 4 நாட்கள் தங்குகிறார்.

இந்த பயணத்திற்கு காரணம் இயக்குனர் ஷங்கருடன் அவர் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டை சந்திக்கிறார். 

சந்திப்பின்போது எந்திரன் இரண்டாம் பாகத்தில் அர்னால்ட் நடிப்பது பற்றியும், அவரது கேரக்டர் பற்றியும், எத்தனை நாள் கால்ஷீட், எவ்வளவு சம்பளம் என்பது பற்றியும் முடிவு செய்கிறார்கள்.  இவர்களுடன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரிகளும் செல்கின்றனர்.

மேலும் எந்திரன் இரண்டாம் பாகத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடக்க உள்ள ஸ்டூடியோக்களையும் பார்வையிடுகிறார். இவை அனைத்தையும் முடித்து விட்டு டிசம்பர் 1ம் தேதி மலேசியா திரும்பும் ரஜினி, மீண்டும் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions