ரஜினி மரியாதைக்குரியவர்.. என் அரசியலில் அவர் பெயரை இழுக்க வேண்டாம் - கஸ்தூரி ராஜா

Bookmark and Share

ரஜினி மரியாதைக்குரியவர்.. என் அரசியலில் அவர் பெயரை இழுக்க வேண்டாம் - கஸ்தூரி ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினி மரியாதைக்குரியவர். நான் அரசியலில் இணைந்ததற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பெயரை இழுக்க வேண்டாம் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரி ராஜா திடீரென பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். கோவை வந்த அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அக்கட்சியில் சேர்ந்தார்.

கஸ்தூரிராஜா ரஜினியின் சம்பந்தி என்பதால், ரஜினி ஆலோசனைப்படி அவர் பாஜகவில் சேர்ந்ததாக சிலர் கூறினர். இந்த நிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தது குறித்து கஸ்தூரி ராஜா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வரும் திட்டங்களில் ஈர்க்கப்பட்டு பாரதீய ஜனதாவில் இணைந்தேன்.

அவர் இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

என் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதே நேரம் இந்தியா என்பது உயிர் போன்றது. நாட்டை சிறப்பாக வழி நடத்தும் நரேந்திர மோடி பின்னால் அணிவகுப்பது எனது கடமை என கருதுகிறேன்.

கட்சி மேலிடத்தின் முடிவுகளை ஏற்று இனி செயல்படுவேன். ரஜினி தூண்டுதல் பேரில் பாரதீய ஜனதாவில் நான் சேர்ந்ததாக வரும் தகவல்களில் உண்மையில்லை. பாரதீய ஜனதாவில் சேர வேண்டும் என்பது நானாக எடுத்த முடிவு ரஜினி மரியாதைக்குரியவர்.

இதில் அவரை இழுக்க வேண்டாம்.. அவருக்கும் என் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்றார்.


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions