ரஜினி கேட்ட 20 காமெடி கதைகள்!

Bookmark and Share

ரஜினி கேட்ட 20 காமெடி கதைகள்!

லிங்கா படத்தில் அதிர்ச்சி தோல்வியில் இருந்து பல மாதங்களுக்குப்பிறகு இப்போதுதான் மீண்டு வந்துள்ளார் ரஜினி. முக்கியமாக லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷடஈடு கேட்டு பேர்க்கொடி பிடித்து வந்தவர்களுக்கு சமீபத்தில்தான் தனது சார்பில் ஒரு தொகையை கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.

அதையடுத்து அவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் எந்திரன்-2 படத்தில்தான் நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் தற்போது சில இளவட்ட டைரக்டர்களை அழைத்து கதை கேட்டு வருகிறார் ரஜினி.

குறிப்பாக, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி மற்றும் ராஜேஷ்.எம் உள்ளிட்ட பல வளர்ந்து வரும் டைரக்டர்களிடம் தற்போது கதை கேட்டுள்ளார் ரஜினி. அப்படி அவர் கதை கேட்டிருக்கும் அத்தனை இயக்குனர்களுமே காமெடி படங்கள் பண்ணியவர்கள்தான்.

அதனால் அந்த வரிசையில் தனக்காகவும் காமெடி கதை கேட்டுள்ள ரஜினி, இதுவரை 20 கதைகள் கேட்டிருக்கிறார். ஆனால் அதில் எந்த கதையில் நடிப்பது என்பது பற்றிய முடிவினை இன்னும் எடுக்காத ரஜினி தற்போது தனது ஆலோசகர்களிடம் அந்த கதைகளில் எந்த கதையில் அடுத்து தான் நடிக்கலாம் என்பது பற்றிய பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரமே ரஜினியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. 


Post your comment





Related News
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions