ரஜினிகாந்திற்கு மூன்றவாது பேரன்...!

Bookmark and Share

ரஜினிகாந்திற்கு மூன்றவாது பேரன்...!

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள். மூத்தவர் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லிங்கா, யாத்ரா என்று இரண்டு மகன்கள்.

ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா, தொழிலதிபர் அஸ்வினைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதன் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் தாத்தாவாகி உள்ளார். இந்த புதிய குழந்தையுடன் ரஜினிகாந்திற்கு இப்போது மூன்று பேரன்கள். 70களிலேயே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்று பாலசந்தரால் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த்.

தன்னைப் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் ஐஸ்வர்யா, செளந்தர்யா. மகள்கள் இருவரையும் திரைத் துறையிலேயே பணியாற்ற ரஜினிகாந்த் சம்மதித்தார்.

ஐஸ்வர்யா '3, வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கினார். சௌந்தர்யா 'கோச்சடையான்' படத்தை இயக்கினார். மகள்களைப் போல தன்னுடைய மூன்று பேரக் குழந்தைகளையும் திரைத் துறையில் ரஜினிகாந்த் அறிமுகப்படுத்துவாரா என்பது இன்னும் 15 வருடங்கள் கழித்துத் தெரியும்.


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions