சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமையானவர்: அக்ஷய்குமார் பேட்டி

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எளிமையானவர்: அக்ஷய்குமார் பேட்டி

‘எந்திரன்’ படம் 2010-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ‘2.0’ என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த்-எமிஜாக்சன் ஜோடியாக நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வருகிறார். 

ரூ.350 கோடி செலவில் 2.0 படம் தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து அக்ஷய் குமார் அளித்த பேட்டி வருமாறு:- 

‘‘ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. எனக்கும் அது இருந்தது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் என் வாழ்க்கையில் நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

டைரக்டர் ஷங்கர் என்னை இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது வேறு உலகத்தில் பறந்த உணர்வு ஏற்பட்டது. இதில் வில்லனாக வந்து ரஜினிகாந்திடம் அடிவாங்கும் காட்சிகளில் நடிக்கிறேன். 

ரஜினி கையால் அடிவாங்குவது கூட பெருமையான விஷயம். ரஜினி எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். எல்லோருடனும் சகஜமாக பேசுவார். அவர் ஒரு நல்ல மனிதர்.

படப்பிடிப்பில் ஒரு நாள் ரஜினிகாந்த் நடந்து கொண்ட விதம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அவர் சம்பந்தப்பட்ட காட்சி படமாக்கப்பட்டதும் ஓரமாக சென்று உட்கார்ந்து இருந்தார். 

அவருக்கு பணிவிடைகள் செய்ய சுற்றிலும் 15 பேர் நின்று அவருடைய கண் அசைவுக்காக காத்துக்கொண்டு நின்றார்கள். அப்போது ரஜினி அணிந்து இருந்த ‘பேண்ட்’டில் தூசி ஒட்டிக்கொண்டு இருந்தது.

அதை துடைக்க கூப்பிடுவார் என்று 15 பேரும் தயாராக இருந்தார்கள். ஆனால் ரஜினி யாரையும் அழைக்கவில்லை. அந்த தூசியை தனது கையால் தட்டிவிட்டு சரிபடுத்தினார். ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் அந்த எளிமையான செயலை பார்த்து வியந்து போனேன். 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions