முதல்வரைச் சந்திக்க ரஜினிகாந்த் முயற்சி

Bookmark and Share

முதல்வரைச் சந்திக்க ரஜினிகாந்த் முயற்சி

'லிங்கா' நஷ்ட ஈடு தொடர்பான பிரச்சனை ஏழு மாதங்களைக் கடந்தும் இன்னும் ஏறிக் கொண்டே போகிறதே தவிர, குறையவே இல்லை. இதனிடையே கடந்த வாரம் ரஜினிகாந்த் தமிழக முதல்வரைச் சந்தித்து இது சம்பந்தமாகப் பேசப் போவதாக செய்திகள் வெளியானது.

அதன் பின் 'லிங்கா' வினியோகஸ்தர்களும், நாங்களும் அரசிடம் முறையிடுவோம் என்று தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன் 'லிங்கா' வினியோகஸ்தர்கள் தமிழக அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலருக்கு 'லிங்கா' வினியோகஸ்தர் சிங்காரவேலன் கடிதம் எழுதியுள்ளதாகச் சொன்னார்கள். அதையடுத்து அவர்களைச் சந்திக்க உள்துறைச் செயலர் அனுமதி கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ரஜினிகாந்த் முதல்வரைச் சந்திக்க இந்த மாதம் 3ம் தேதியும், 5ம் தேதியும் 'அப்பாயின்ட்மென்ட்' கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள்.

'லிங்கா' பிரச்சனையை மனதில் வைத்துத்தான் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கூட ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்கிறார்கள். நேற்று, முன் தினம் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, கருணாநிதியுடனும் பேசி விட்டு வந்தார்.

அதனால், அவருக்கு முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று கோலிவுட்டில் நேற்றெல்லாம் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முன் ’லிங்கா’ பிரச்சனையை முழுவதுமாக முடித்து விட்டு மன நிம்மதியுடன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முயற்சித்து வருகிறார் என்கிறார்கள்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions