சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Bookmark and Share

சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. ஆனால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தினால் காவிரி போராட்டத்தின் வீரியம் இழந்து விடும் என வலியுறுத்தி சென்னையில் நேற்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல், போலீசார் மீதும் சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது .இந்நிலையில், சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions